308. குழந்தை பிரியதர்ஷினி நலம்
அன்பான நண்பர்களே,
குழந்தை பிரியதர்ஷினியின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவித் தொகை திரட்ட வேண்டி, நான் இட்ட பதிவின் மற்றும் பொன்ஸ் இட்ட பதிவின் தொடர்ச்சியாக, பல வலையுலக நண்பர்கள் பொருளுதவி செய்தனர். நம் தமிழ் வலைப்பதிவாளர்கள் சார்பில், திரட்டிய உதவித்தொகையான ரூ.27,500-ஐ குழந்தையின் மருத்துவ உதவிக்கு வழங்கினோம். இம்முயற்சிக்கு ஆதரவு (உதவியும், பிரார்த்தித்தும்) தந்த நண்பர்களுக்கும், பொன்ஸ¤க்கும் நன்றிகள் பல. இந்த உதவி முயற்சியின்போது தான், மருத்துவமனையில் (Dr.Cherian's Heart Foundation) பொன்ஸையும், பாலபாரதியையும் முதன்முறையாக சந்திக்கும் பேறு கிட்டியது :)
இன்று பிரியதர்ஷினியை மூன்றாவது முறையாக சந்தித்தேன். மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி ஒரு வாரம் ஆகி விட்டது. நன்றாக நலம் பெற்று வருவதாக அறிந்தேன். அறுவை சிகிச்சைக்கு முன் முகம், கழுத்து, கைகளில் (இதயத்தில் நல்ல இரத்தமும், கெட்ட இரத்தமும் கலந்து விடுவதால்) காணப்பட்ட நீலநிற திட்டுக்கள் முழுதும் மறைந்து, குழந்தை பளிச்சென்று இருக்கிறாள். அவள் தாய் தந்தையும் மிக்க மனநிறைவுடன் பேசினர்.
நடந்து முடிந்த அறுவை சிகிச்சை சற்று காம்பிளக்ஸ் வகைப்பட்டது என்று டாக்டர் கூறினார். இன்னும் ஒரு வருடம், செக்கப்புக்கு வேண்டி ஒரு மூன்று முறை அவள், கோயமுத்தூரிலிருந்து சென்னை வர வேண்டியிருக்கும். மறுபிறவிக்கு ஒப்பாக, மீண்டு வந்திருக்கும் பிரியதர்ஷினியை எப்படி கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அவளது பெற்றோருக்கு இன்று அறிவுரை (லேசாகத் தான்!) வழங்கி கொண்டிருந்தபோது, குழந்தை கண்ணயர்ந்து விட்டாள். சரி தான் என்று விடை பெற்றுக் கொண்டேன் :) கோயமுத்தூர் வந்தால், தங்கள் வீட்டுக்கு வர வேண்டும் என்ற அவர்களது அன்பான அழைப்பை ஏற்றுக் கொண்டேன்.
நமது உதவித்தொகை தவிர, பிரியதர்ஷினிக்கு விப்ரோவிலிருந்தும், சில தொண்டு நிறுவனங்களிலிருந்தும் கிட்டத்தட்ட 1,20,000 ரூபாய் நிதியுதவி வந்திருந்தது. ஏதோ ஒரு விதத்தில், ஒரு நல்ல காரியத்தில், நம் பங்கை ஆற்றியிருக்கிறோம் என்ற அளவில், மனநிறைவும், மகிழ்ச்சியும் ! உதவிய நண்பர்களுக்கு மீண்டும் நன்றி. ஒத்துழைப்பு தந்த பொன்ஸ¤க்கும், பாலபாரதிக்கும் எல்லோர் சார்பிலும் வாழ்த்துக்கள் !
என்றென்றும் அன்புடன்
பாலா
*** 308 ***
14 மறுமொழிகள்:
Test comment :)
உதவிய பொன்ஸ¤க்கும், பாலபாரதிக்கும், உங்களுக்கும் எங்களது பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
நன்றி; வளர்க நும் தொண்டு.
ரொம்ப சந்தோஷம்...உங்களுக்கும், பொன்ஸுக்கும், பாலபாரதிக்கும் பாராட்டுக்கள்....
மிகவும் மகிழ்ச்சி!
உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் பாராட்டுக்களும், நன்றிகளும் உரித்தாகுக!
குழந்தை குணமடைந்த செய்தி மிக்கமகிழ்வை தருகின்றது....
தகவலுக்கு நன்றி பாலா
மிக்க மகிழ்ச்சி...
Good to hear about the recovery of Priyadharshini.
Appreciate all of your efforts for helping the child.
- Sekar, SG
Good news indeed..Thanks for the update,Bala :)
மிக்க மகிழ்ச்சி.. தகவலுக்கு நன்றி.
வலைப்பதிவர்களின் சமுதாயப் பணிக்கு தலை வணங்குகிறேன். இவ்வுதவியை ஒருங்கிணைத்த உங்களுக்கும், பொன்ஸ், பாலபாரதிக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
பாலா அவர்களுக்கு,
ரொம்ப சந்தோஷமா இருக்கு இந்த பதிவை படித்ததில்.
உங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துகள்.
வருகை தந்து உணர்வை பகிர்ந்து கொண்ட தருமி, மங்கை, சிபி, ராம், சேதுக்கரசி, சேகர், கோபாலன் ராமசுப்பு, மணியன், மனதின் ஓசை மற்றும் ஸ்ரீதர் வெங்கட் அவர்களுக்கு மிக்க நன்றி. உங்களைப் போன்றவர் தரும் உற்சாகமும், முடிந்த அளவு செய்யும் உதவியும், இது போன்ற உதவி முயற்சிகளில் ஈடுபட ஊக்கம் தருகின்றன.
பாலா...
உன்னுடன் தொலை பேசி மூலம் பேசிய போது தெரிந்து கொண்ட விஷயம்தான் என்றாலும் பின்னூட்டக் கயமையாய் ஒரு பின்னூட்டம் :)
பாலபாரதி மற்றும் பொன்ஸ¤க்கும் வாழ்த்துக்கள் .
God Bless the child for good health.
உதவிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி..நன்றி...நன்றி
மன நிறைவு தரும் நல்ல செய்தி.
நேரடியாக இருந்து தேவையான உதவிகளை ஒருங்கிணைத்துச் செய்த பொன்ஸ், பாலபாரதி, எ.அ.பாலாவுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், நன்றிகள்!
Post a Comment